தம்பியின் கற்பனையில் அவனின் அக்கா (பாகம்-2)
பாகம்-1 – ல் தம்பியின் வாழ்க்கை வரலாற்றை தன் அக்காவிடம் கூறும் பழக்கம் கொண்டவன் என்று சொல்லிருந்தேன். .
அவன் ஏன் அக்கா என்றால் இவ்வளவு பாசம் வைத்துள்ளான் என்று அவனுக்கு தெரியாது. ஆனால் தன் சிறு வயது முதல் அவன் அப்படித்தான் போல. சரி வாங்க கதையை பார்போம். ஒரு சண்டையில் தொடங்கியது. சண்டை எதற்கு என்று தெரியாது, ஆனால் சண்டை போடுவது அவன் இயல்பு, அவனே சண்டையும் செய்வான் மன்னிப்பும் கேட்பான். அப்போது தன்னை பற்றி அந்த அக்காவிடம் கூற தொடங்கியவன்,இன்று வரை நிறுத்த வில்லை. அக்காவும் அவனின் கதையை பொறுமையாக கேட்பாள், பிடிக்குமோ பிடிகாதோ ஆனால் அவள் அவன் மனம் நோகும் படி ஏதும் கூற மாண்டாள். அதுவே அவனுக்கு அக்காவின் மீது அதித பாசம் வரம் காரணம் என்று நினைக்கிறன்.
அக்கா உனக்கு ஒன்னு தெரியுமா என்று ஆரம்பிக்கும் அவன், கூற தொடங்குவான். எனக்கு அக்கா என்றால் ரொம்ப பிடிக்கும், இது போன்று இனிமே என்னை திட்டாத , அடி ஆனால் திட்டாத என்று அழு மூஞ்சி உடன் கூறுவான். பாவம் அவன் அக்கா இவன் ஏன் இப்படி பேசுறன் என்று புரியாமல் இருந்தால் பின்பு அவளுக்கு ப பழகிவிட்டது. காலம் போக போக அவளும் இவனை தன் தம்பி போல பார்க்க ஆரம்பித்தாள். அக்கா – வை பொறுப்பாக வீட்டிற்கு கூட்டிசெல்வது, பின் ஆபீஸ் க்கு கூட்டிசெல்வது இவனுக்கு பிடித்ததாக போய்விட்டது. அக்காவின் ரெண்டவாது சுட்டி பையனுடன் விளையாடுவது அவன் இவனை மாமா என்று அழைப்பது இவனுக்கு பிடிக்கும். ஆனால் தம்பிக்கு அக்காவின் வீடுகாரரிடம் பேச கொஞ்சம் பயம், காரணம் இவன் குட பிறந்த தம்பி இல்லை அல்லவே. ஆனாலும் எப்படியோ பேச தொடங்கிவிட்டான். இவனின் அலைபேசி எண்ணை அவர் save பண்ணியதும் இவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.
ஒரு முறை அக்கா அவனின் போன் நம்பர் ஐ – வெறும் பேர் போட்டு save பண்ணி இருந்தால், அதை பார்த்ததும் அவன் என்ன செய்தான் தெரியுமா, அக்காவின் போன் – ஐ பிடுங்கி பார்த்து ஒரு தம்பி நம்பர் – ஐ இப்படியா save பண்ணுவ என்று கோபமாய் கேட்டு, தம்பி என்று save பண்ணு என்று கேட்டான். ஏன் என்று தெரியவில்லை அவன் அக்கா அவனிடம் செரியாக பேசவில்லை என்றால் இவன் மனம் நோகும், உடனே செல்வான் அக்கா ஏன் சோகமா இருக்கற என்று கேட்பான். அவளோ ஒன்னும் இல்லடா, போ என்று பொறுமையாக கூறுவாள்.
வேலை பார்க்கும் போது அக்காவை யாராவது திட்டினாலோ கொஞ்சம் கடுமையாக பேசினாலோ அவர்கள் அவ்வளோதான், இவனிடம் வாங்கிகட்டிகொள்வார்கள், யார் என்றுலாம் பார்ப்பது கொஞ்சம் கடினம், உடனை அக்கா பக்கம் நிற்பான்.
பாவம் இவன், இவனக்கு தான் அக்கா இல்லை.
இவன் ஒரு கேள்விகுறிதான், அக்கா கிடைக்கும் வரை.
கற்பனையில் தற்போது…



