பாகம் – 1
அம்மா பையன் அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம், அதே போல் இவனும் அம்மா பையன் தான், ஆனால் அம்மாவை எவ்வளவு பிடிக்குமோ அதேபோல் அக்காவையும் பிடிக்கும். சொல்லபோனால் இவன் ஒரு அக்கா பையன் என்று கூட சொல்லலாம்.
ஆம் அக்கா பையன்.
இவன் அவ்வளவு எளிதில் ஒருவரை தன்னுடையவர்கள் என்று கருத மாண்டான். ஆனால் அப்படி நடந்துவிட்டால் இவனை அவர்களிடம் இருந்து பிரிபதோ, இவன் அவர்களை விட்டு கொடுப்பதோ கனவிலும் நடக்காது. இவன் அப்படி ஒரு அக்காவை கண்டுபிடித்து விட்டான்.
சொல்லவா வேண்டும் ஆம் இவன் அந்த அக்காவை பாடாய் படுத்திவிட்டான். அவனுக்கு தெரியும் ஆனால் அவன் என்ன செய்வான், பாவம். அவன் பிறந்தது முதல் என்றும், இன்றும், வரும் காலங்களிலும் அவன் அக்கா இருத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி எண்ணி கற்பனையில் வாழ்பவன். சொல்லப்போனால் கற்பனையில் மட்டுமே வாழ்பவன்.
அவனுக்கு கிடைத்த அந்த அக்காவை அவன் வேலை பார்க்கும் இடத்தில் கண்டுபிடித்தான். பாவம் அவன் அந்த அக்காவை அனுதினமும் அக்கா அக்கா என்று கூறி torture செய்வான். அந்த அக்காவும் பொறுமையாக கேட்பாள் இவனின் வாழ்க்கை வரலாட்றை. இவனுக்கு சந்தோசம் அதில், இவனுக்கும் ஒரு அக்கா இருக்கின்றால் என்று. ஆனால் இவன் ஒரு பைத்தியக்காரன் அக்கா கொஞ்சம் இவனை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால் போதும் உடனே மூஞ்சியை தூக்கி கஷ்மிர்ரில் வைத்துகொள்வான். பின் அக்கா விடம் சண்டை போடுவன் , அவனே சமாதானம் செய்வான். இந்த எல்லாவற்றையும் அந்த அக்கா பொறுத்துகொள்வாள்.
ஆனால் இவன் மனம் மட்டும் மாறது, தன்னுடைய உடன்பிறந்த அக்கா வாக இருந்தால் அவள் அப்படி செய்து இருக்க மாண்டாள் என்று நினைக்கும் மனம் கொண்டவன். ஆனால், அவன் அவனுடைய அக்காவின் முகத்தில் சிறிது மாற்றம் தெரிந்தாலே போதும் உடனே ஓடி விடுவான், அக்கா அக்கா ஏன் இப்படி சோகமாக இருக்கற என்று கேட்டு ஆறுதல் கூறுவான், அக்காவை மகிழ்விக்க சாக்லேட் வாங்கி வருவான். அதனை அக்கா இந்த சாக்லேட் என்று ஆசையாக கொடுப்பன்.
பாவம், அவன் மனம் குழந்தை போல அவன் அக்கா – வேற ஒருவரை தம்பி என்று கூப்பிடால் கூட அக்கா இவனை தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்து திரும்பி பார்பான், பின் வேற யாரையோ கூப்பிட்டது தெரிந்தும் மனம் கவலை கொள்வான். என்னதான் இவன் அந்த அக்கா உடன் பிறக்கவில்லை என்றாலும் , அக்காவை எங்கையும் விட்டுகுடுக்க மாண்டான்.
இவன் அந்த அக்காவிற்கு வைத்த பெயர் – மும்மா (Mumma), மை மம் (My Mum).
ஆனால் இவன்னின் பாசம் என்பது அக்காவின் மீது எல்லை அற்ற ஒன்று என்று யார்க்கும் தெரியாது. இவனின் ஏக்கமும் எப்போது விடை கொடுக்கும் என்று இவனும் அறியமானட்ன்.
தற்போது இவனுக்கு கிடைத்த அக்கா – கற்பனையில் !



