அவன் ஒரு சிறுவன், தன் பள்ளிப்படிப்பை தொடங்கினான். ஒரு தனியார் பள்ளியில் LKG வகுப்பில் தன்னுடைய முதல் நாளை தொடங்கினர் அவன். அவனுடைய பெற்றோருக்கு அவன் மட்டுமே செல்லம். அவனோ தனிக்காட்டு ராஜா (புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்) ஆம் அவன் ஒருவனே.
தனது ஆரம்பக் கல்வியை தனியார் பள்ளியில் தொடங்கிய அவன், அவனுடைய குறும்பு சேட்டைகளையும் தொடங்கினான். LKG வகுப்பில் தனது அருகில் அமர்ந்து இருக்கும் சக குழந்தைகளை கிள்ளி விட்டு பிரிப்பதில் தொடங்கி கடித்து வைத்து அழ வைப்பதில் கில்லாடி இவனே. தனது குறும்பு சேட்டைகளால் தினமும் ஆசிரியர் இவனை செல்வமாகும், கொஞ்சம் கடினமாகவும் கண்டிப்பது வழக்கமாக மாறியது. ஆனால் இவனின் குறும்பு தனம் மட்டும் மாறிய நாடு இல்லை. அந்த சமயத்தில் தான் தனது பிடிவாத குணத்தை காண்பிக்க தொடங்கினான் அவன். சிறிது நேரம் அழுதுகொண்டே பெற்றோருக்கு சிரமம் கொடுப்பது பின் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வது இவன் பழக்கம்.

ஒரு சமயம் இவனுடைய school dairy(டைரி) முகப்பு பக்கங்களை நிரப்ப, ஆசிரியர் ஒருவர் அவனுடைய அப்பா, அம்மா பெயர் மற்றும் உடன் பிறந்தோர் பெயர் கேட்டார்.தனது அப்பா, அம்மா இருவரின் பெயரை கூறிவிட்டு பின் தனக்கு ஒரு அக்கா இருப்பதாகவும் அவள் பெயரையும் டைரிமில் எழுதும் படி ஆசிரியரை கேட்டான். ஆசிரியை இவனுக்கு அக்கா இருக்கிறாளா என்று நினைத்து கொண்டே பெயரை கேட்க – அந்த சிருவனோ திவ்யா அக்கா என்று ஆசையாக கூறினான். ஆனால் உண்மையில் அவனுக்கு உடன் பிறந்த அக்கா என்று யாரும் கிடையாது,என்று அந்த ஆசிரியைக்கு தெரியாது.அவனோ சிறு குழந்தை பையன், கூறியதை நம்பி டைரியில் அப்படியே எழுதிவிட்டார்கள்.

ஆம் அவன் கூறியது உண்மை தான், அவன் மனதை பொறுத்தவரை அவனுக்கு ஒரு அக்கா இருக்கிறாள் அவள் பெயர் திவ்யா. காரணம் கிடையாது, ஏன் என்றால் அவன் ஒரு குழந்தை பையன், மூன்று வயது முடிந்து நான்காவது வயது ஆரம்பம். ஆனால் இதுவே முதல் முறை தன் பெற்றோருக்கே (முதல் குழந்தை அக்கா ஒருவள் இருக்கிறாள் என்று) அவனுடைய அக்கா – வை அறிமுகம் செய்வது. ஆம் அவன் செய்த இந்த சேட்டை ஒரு நாள் அவனுடைய டைரியை பார்த்த சித்தப்பா விற்கு சிரிப்பை தந்தது. பின் அன்று அவனுடைய வீட்டில் அவன் அப்பா , அம்மா , ஆத்தா மற்றும் சித்தப்பா – விற்கு பேசு பொருளாக மாறியது. அந்த அக்கா வேற யாரும் இல்லை, அவனுடைய பெரியம்மா பெற்ற பிள்ளை தான் அவனுடைய பாசத்திற்கு உரிய அக்கா – திவ்யா அக்கா.
தொடரும்…


