அக்கா இல்லாத தம்பிகளுக்கு தான் தெரியும்.
அக்கா என்பது ஒரு சொல்லோ,உறவோ கிடையாது.
Its an Emotion.(அது ஒரு உணர்ச்சி)
என்று.

அத எப்படி சொல்லுவது – அது ஒரு உணர்வு பூர்வமான பந்தம்.
எளிதில் கிடைக்காத அன்பு.
காண கிடைக்காத ஒன்று – அக்கா .
அவள் தன் தம்பிக்கு இன்னொரு அம்மா.
அக்கா இல்லாத தம்பிகளுக்குதான் தெரியும் – அக்கவுக்குகான ஏக்கம் எப்படி இருக்கும் என்று.
(கற்பனை காட்சிகள்)
தன்னை அடிபதற்கும்,தன்னிடம் அடி வாங்குவதற்கும் அவள் அக்கா.
தான் சோகமாக இருக்கும் போது தன்னை கட்டி தழுவி ஆறுதல் கூறும் அவள் – அம்மா.
சிறு வயதில் தன்னை தூக்க முடியாமல் தூக்கி சென்று சந்தோசம் கொள்வதில் அவளுக்கு தான் முதல் இடம் கொடுக்க வேண்டும்.
தன் தம்பியை திட்டி ஆனந்தம் கொள்ளும் அவள் மனது.
ஆனால் பிறர் திட்டினால் கோபம் கொள்ளும் கொள்வாள்.
dai என்று உருமையோடு தன் தம்பி யை சத்தம்போடுவாள்,
ஆனால் மீண்டும் அவனை சமாதானம் செய்வாள்.
தலை சீவி விடுவாள்,
அதுவே அவன் சேட்டை செய்தால் தலையை பிடித்து கொதறி விடுவாள்.
சபாட்டில் சண்டை வந்தாலும், தம்பிக்காக தன் பங்கை விட்டு கொடுப்பாள்.
தனிமை என்பதே இந்த உறவில் கேள்விகுறிதான்.
காரணம், அக்கா தம்பி பாசம் .
எங்கு சென்றாலும் இருவரையும் ஒன்று சேர்திவிடும் பலம் கொண்டது.
சேற்றில் இறங்கி சோர்வடையும் விளையாடியது முதல்,
அவள் கல்யாணத்தில் அவளை காண்பது வரை,
எளிதில் கிடைக்காத ஒன்று.
தோளில் சாய்ந்து அழுக கிடைதவள் அவள்.
விசேஷசங்களில் நாம் வேறு எங்காவது சென்று விட்டால் நம்மை தேடி தேடி அலைவாள்.
அவளுக்கு நிகர் அவள்தான் என்று எப்போதும் நிருபிக்கும் குணம் கொண்டவள்.
காலம் கடந்தாலும் அக்கா அவள் எப்போதும் அவள் தம்பிக்கு பிடிதமானவள் தான்.
அன்னைக்கு நிகரான அவள் அன்னை ஆகும் போது
தம்பி தாய்மாமன் ஆகிறான்,
அவளின் பிள்ளைகளுக்கு பிடித்தமானவனாக இருக்கிறான்.
அக்காவிற்கு செய்யும் சீர்களுக்கு அவன் ஏங்குகிறான்.
அக்கா தன்னை விட்டு அவள் புகுந்த வீடு சென்றாலும்,
அவனும் பின்னே செல்கிறான்.
ஏனென்றால், அவள் அவனின் அக்கா மட்டும் அல்ல அம்மாவும் தான்.
என்னதான் இருந்தாலும் – அக்கா என்பது அழகு தான்.
ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் இருந்தாலும் அவனுக்கு அக்கா இல்லை என்பதே ஒரு பதிலில்லா கேள்வி போலத்தான்.
அக்காவுக்குகான அவனின் ஏக்கமும், தேடலும் தொடரும்…



