இவன் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாம் இவனை மனோஜ் சுருக்கமாக தம்பி என்று வைத்துக் கொள்வோம். இவன் அனைவரின் மீதும் அன்பு காட்டும் குனம் கொண்டவன்.இவனுக்கு அம்மா என்றால் அம்புட்டு பிடிக்கும். அதற்காக அப்பா பிடிக்காதவர் என்று அர்த்தம் இல்லை, அப்பாவும் பிடித்தவர் தான். ஆனால் இவனுக்கு அக்கா என்றால் சிறுவயது முதலே அம்புட்டு பிடிக்கும். அதற்காக அவன் அவனுடைய பெரியம்மா வீட்டிற்கு சென்று பெரியம்மாவின் மகளான தன் அக்காவுடன் இருப்பான்.என்னதான் இருந்தாலும் தனக்கு ஒரு அக்கா, இவனுடன் பிறக்கவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
இவன் பிடிப்பில் ஓரளவு தான். ஆனால் இவன் முயற்சிக்கு ஏற்ப இவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அப்போது இவனுக்கு வயது 23. இவனின் புரிதல் திறன் இவனின் வேலையை சுலபமாக மாற்றியது.இதனால் இவனுக்கு அலுவலகத்தில் பெயர் சொல்லும் வகையில் பணியை நல்ல முறையில் செய்து வந்தான்.இவனுக்கு பணியிடம் மாற்றம் கிடைக்கப்பெற்று வேறு ஒரு அலுவலகம் சென்றான். அங்கு பிடித்து தான் சென்றான்.ஆனால் அங்கு உள்ளோர் எப்படி இவனை பார்ப்பார்கள் என்று நினைத்து இருந்து தான். இருந்தாலும் இவனுக்கு அங்கு செல்வது பிடித்து தான் இருந்தது. அங்கு வேலை பார்க்கும் அனைவரும் இவனுக்கு பிடித்தவர்களாக இருந்தனர். இவனும் அங்கு நன்றாக தன் வேலையை செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு அக்கா இல்லை என்று ஏக்கம் அங்கு கொஞ்சம் அதிகரித்தது. இதனை அதிகரிக்க காரணம் அங்கு அவனுடன் வேலை பார்க்கும் ஒரு அக்கா தான். ஒரு வகையில் அவள் இவனுக்கு அக்கா தான் ஆகும். அதனால் என்னவோ தெரியவில்லை அவளும் இவனை தம்பி தம்பி என்று தான் கூப்பிடுவாள். இவனோ தம்பி என்று யார் கூப்பிட்டாலும் அவ்வளவுதான்.அதுவும் இந்த அக்கா என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்வான். அக்கா வின் பெயர் சொல்ல மறந்துவிட்டேன்,இவனின் பாசமிகு அக்காவின் பெயர் பிரவீனா. ஆனால் இவன் இதுவரை அக்கா என்று தான் அழைப்பான், பெயர் சொல்லுவதில்லை. சில முறை பிரவீனா அக்கா என்பான். தன் அம்மா விடம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அக்காவை பற்றி பேசி விடுவான். இவனுக்கு அக்கா என்றால் எம்புட்டு பிடிக்கும் என்று அவளுக்கும் அதாவது அக்காவிற்கும் தெரியும். பாவம் அவளும் இந்த பைத்தியக்கார தம்பி செய்யும் சேட்டைகளை பார்த்து கவலை படுவாள்.அதற்காக அவளுக்கு கோபம் வராது என்று நினைத்து விடாதீர்கள். கோபம் வந்தால் அந்த தம்பி செத்தான் என்று தான் நினைக்க வேண்டும். பல முறை அவள் தம்பி மீது கோபத்தில் அவனை திட்டி பேசியிருக்கிறாள்.பாவம் அவன் அக்கா அக்கா என்று தான் நிப்பான். அப்போது இவனுக்கு தோன்றும் அவள் ஒன்றும் இவனின் சொந்த அக்கா இல்லை என்று அதனால் தான் அவள் தன்னிடம் இருந்து விலக நினைக்கிறாள் என்று.இருந்தும் இவனின் மனம் நொந்து போய் விடும்.மனம் கேட்காது மீண்டும் அக்கா அக்கா என்று அக்காவை கூப்பிடுவான்.
அவள் கோபம் தனிய இரண்டு மூன்று நாட்கள் ஆகும். ஆனால் தவறு யார் மீது, என்ன தவறு என்று தெரியாது இவன் முதலில் மன்னிப்பு கேட்பான்,அக்காவோ நீ என்ன தப்பு பண்ண என்று உதாசீனம் செய்வாள் பாவம் இவன் என்ன செய்வான் அங்கேயே நின்று அழுது விடுவான். அதற்க்கும் அவள் இவனை திட்டுவாள், அழுவதை தவிர்த்து இவனால் என்ன செய்ய முடியும், பாவம் இவனின் பாசம் எல்லை இல்லாத ஒன்று என்று அக்கா வின் கோபத்திற்கு தெரியாது என்று நினைப்பது இவனுக்கு பழகிவிட்டது. இவனுக்கு அக்கா தன்னை மற்றவர்களிடம் சித்தி பையன். தன் தம்பி என்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று நினைப்பான். இவனும் தன் அக்காவுடன் ஊருக்கு போகவேண்டும். அக்காவின் கணவர், அதாவது இவனின் மச்சான், இவனையும் அக்காவின் தம்பியாக பார்க்க வேண்டும், என்று நினைப்பான். அவன் இருக்கும் வரையில் அக்காவை பற்றி கவலைப் பட தேவை இல்லை என்று மாமா நினைக்க வேண்டும் என்று நினைப்பான். என்னதான் அக்கா தம்பி என்று இருந்தாலும் அக்கா சிலமுறை இவனுடன் இருசக்கர வண்டியில் வர தயங்குவாள், அதுதான் அவனுக்கு ஒரு பெரிய வலியை கொடுக்கும்.அதை அவனால் வார்த்தைகலில் கூற முடியாது.அவனே தன்னை சமாதானம் செய்து கொள்வான், அக்கா தான என்று, ஆனால் நாம் ஒன்றும் உடன் பிறக்கவில்லை என்று.
ஆனால் அக்கா அவளும் பாசத்தில் இவனுக்கு சமம் தான். ஒரு இவன் அவளின் மதிய உணவை சாப்பிட சொன்னாள் ஆனால் இவனோ சாப்பிடவில்லை பாவம் அப்போ அவனுக்கு தெரியாது, பிறகு தான் தெரிந்தது அக்காவிற்கு கோபம் வந்தது. பிறகு என்னவென்று சொல்வது அவளை சமாதானம் செய்ய இவன் பட்டபாடு எப்படியோ அக்காவை சமாதானம் செய்து அன்று இரவு உணவு அக்காவின் வீட்டில் அக்கா தோசை சுட்டு சுட்டு போட இவன் சாப்பிட எப்படியோ அக்காவை சமாதானம் செய்தான்.
ஒரு சமயம் அலுவலகத்தில் திடீர் என்று சில நபர்கள் உள்ளே நுழைந்து அங்கு இருக்கும் நகை பணம் எல்லாவற்றையும் அவர்களிடம் தரும் படி மிரட்டல் விடுத்தனர். அப்போது அலுவலகத்தில் (வங்கி) உயர் அதிகாரிகள் யாரும் இல்ல. அக்கா, இவன் மற்றும் உதவி பணியாளர் ஒருவர் மொத்தமாக மூன்று நபர்கள் மட்டுமே இருந்தனர். வந்து நபர்கள் இரண்டு பேர் ஒருவர் கையில் மட்டும் கத்தி 🔪 இருந்தது, மற்றோருவர் கையில் பை வைத்து இருந்தார். வந்தவர்கள் தடதட என்று அக்கா இருக்கும் அறைக்குள் சென்று அக்கா மிரட்ட, தம்பிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனாலும் நிதானமாக யோசித்து அவர்களை பேசி பேசி அவர்களின் நிலையை கூறி லாக்கரை திறக்க இரண்டு சாவி வேண்டும் என்று கூறி ஒன்று தான் இவர்களிடம் உள்ளது என்றும் அக்காவை விட்டு விலகி வாருங்கள் என்று கூறினான்.ஆனால் அவர்கள் அக்கா வை விட வில்லை, இனி என்ன இவன் மூளை படு வேகமாக வேலை செய்யும்.
என்னதான் அக்காவை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டே இவன் இருந்தாலும் அவளுக்கு ஒரு சிறு காயம் கூட ஆகாமல் அக்காவை இதில் இருந்து மீட்க வேண்டும் என்று தீர்மானம் செய்தான். தம்பி அல்லவா இவனின் மனம் மிகவும் பதற்றம் கொண்டது.
ஆனால் ப்படியாவது அக்கா வை அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது இவன் மனதில்.
எப்படியோ அந்த திருடர்களிடம் பேசி பேசி கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி போனான். நெருங்கி சென்று அக்காவை பிடித்திருந்தவனை விட்டு அருகில் கத்தி 🔪 வைத்து இருந்தவனின் காலில் விழுந்தான், திருட வந்து இருவரும் இவனை ஏளனமாகப் பார்க்க அவர்கள் கொஞ்சம் நிலை தடுமாற தன் வேலையை ஆரம்பித்தான்.
தன் இரு கைகளாலும் கத்தி வைத்து இருந்தவனின் கால்லை பிடித்த இவன், அவன் சுதாரிப்பதற்குள் அவனை கீழே தள்ளினான். கீழே விழுந்த அவன் தலையில் நல்ல அடி கத்தியை தவறிவிட்டான். ஆனால் தவறிய கத்தியை அக்கா வை பிடித்திருந்ததவனிடம் சென்றது. சில நொடிகளில் அவன் மேல் தாவிய தம்பி எப்படியோ அக்காவை அவனிடம் பிடியில் இருந்து விலக்கினான். ஆனால் அவன் வலது தொல்பட்டையில் கத்தியால் குத்திவிட்டான் அவன். ஆனால் எப்படியோ அக்கா வை காப்பாற்றிய சந்தோஷம் அவனுக்கு. இது நடக்க கீழே விழுந்தவன் எழுந்து விட்டான்.இப்போ தம்பி அவன் பாரு என்று அக்கா கத்த சுதாரித்து கொண்டான். இருப்பினும் இரண்டு பேர் சேர்ந்து இவனை அடித்து விடலாம் என்று நினைத்தனர். ஆனால் தம்பியோ கொஞ்சம் தந்திரமாக அவர்களை ஏமாற்றி அவர்களை பிடிக்க நினைத்தான்.
ஆனால் அவன் வலது தோளில் இருந்து சிறிது ரத்தம் வந்தது அதனை கண்டு கொள்ளாமல் அவர்களை எப்படி சமாளிப்பது என்று நினைத்து கொண்டு இருந்தான். சில நொடிகளில் நெருங்கி வந்த அவர்களை சற்றும் எதிர்பாராத விதமாக தன் கையை வைத்து ஒருவனின் முகத்தில் குறிப்பாக மூக்கில் குத்தி பின் அவனின் இரண்டு தோளிலும், வயிற்றிலும் உதைத்து கீழே தள்ளினான். பின் தன் அக்கா மேல் கைவைத்து பிடித்து வைத்து இருந்தவனை சிறப்பாக கவனிக்க நினைத்தான். அவனை கீழே தள்ளி உதைக்க நினைத்த தம்பி அவனை நோக்கி நகர்ந்த உடன் அவன் தம்பியை கீழே தள்ள மீண்டும் தோள்பட்டையில் அடி விழுந்தது. தடுமாறினான் வலியும் அதிகமாகி வந்தது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது மீண்டும் அக்கா தம்பி அங்க பாரு டா என்றாள் உடனே அவனுக்கு எங்கு இருந்து அந்த வேகம் வந்தது என்று தெரியவில்லை. அந்த திருடனும் அதைத்தான் நினைத்திருப்பான். பாவம் அவனுக்கு தெரியாது அவள் அவனின் அக்கா என்று. தம்பி என்று கூப்பிட்டாள் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யவான் என்று. அப்போது அவன் வாங்கிய உதையும் அடியும் அளவே இல்லை. அப்படியே காவல்துறை அதிகாரிகள் வந்து திருடர்களை அழைத்துச் சென்றார்கள். இவனையும் (தம்பி) மருத்துவமனையில் சிகிச்சை பெற அழைத்துச் சென்றார்கள்.
அவனுடன் அவனின் பாசமிகு அக்காவும் சென்றாள். இரண்டு தினங்கள் அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினான். சிகிச்சையிலும் அக்கா எங்கே என்று கேட்டான், அவள் இவனுடன் வந்து இவனை பார்த்துகொண்டது இவனுக்கு நியாபகம் இல்லைபோல.
அவனின் ஆசை எப்போதும் அக்கா தன்னை தன் உடன் பிறந்த பொரப்பாக நினைக்க வேண்டும் என்று தான். தெரியவில்லை ஏன் அவனுக்கு பொதுவாக அக்கா என்றால் ஏன் இவ்வளவு பாசம் என்று, அம்மா எப்படியோ அக்காவும் அவனுக்கு அப்படித்தான், அவளையும் ஒரு அம்மாவாக நினைத்தான்.ஆனால் உண்மையில் இவனுக்கு ஒரு அக்கா இருந்திருக்க வேண்டும் உடன் பிறந்த அக்கா. ஆம் இருந்திருக்க வேண்டும், இருந்திருந்தால் அவன் அக்கா மிகவும் அதிர்ஷ்டமானவள் என்று நினைக்கிறன்.
பாசத்துடன் இந்த தம்பியின் நன்றி,இந்த கற்ப்பனை கதையை பொருமையாக வாசித்தாதற்கு.



