பாகம் – 3
ஆம் முன்பு சொன்னது போல இவன் ஒரு அக்கா பையன் தான். என்னதான் இவன் அம்மாவைபிடிக்கும் என்றாலும். இவன் ஒரு சில விஷயங்களை தன் அம்மாவிடம் கூற மாண்டான். ஆம் இவனுக்கு சொந்த அதாவது தன் கூடபிறந்த அக்கா இல்லை என்று ஏக்கம் இவனை பாடாய் படுத்தி எடுத்தது. பல முறை யாருக்கும் தெரியாமல் அழுதும் இருக்கிறான் . பாவம் அவன் என்ன செய்வான். எதற்கும் மனம் தளராதவன் பாசத்திற்கு மட்டும் ஏங்குவான் , அதுவும் அக்கா என்றால் இவனுக்கு உயிர்.
முன்பு கூறியது போலவே இவன் அக்கா செல்லம் என்று வைத்து கொள்வோம். அந்த அக்காவிற்கு ஒரு பெயர் வேண்டும் அல்லவா. பெயர் என்றால் – பிரவீனா என்று வைத்து கொள்வோம். இவன் அக்கா கொஞ்சம் கோபக்காரி தான் ஆனால் இவனிடம் இல்லை. அவளும் ஒரு குழந்தை போல தான் சிறு சிறு விஷயங்களுக்கு கவலை படும் குணம் கொண்டவள். ஆனால் இவனுக்கு மிகவும் ஆறுதலாக இருப்பவள். பல முறை இவன் ஆகவிடம் அழுது உள்ளான்.அபோது எல்லாம் இவனை தேற்றுவது அவளுடைய தலையாய கடமை என்றே சொல்ல வேண்டும்.
தன் வாழ்வில் நடக்கும் அணைத்து விஷயங்களையும் அவனுக்கு நியாபகம் உள்ள எல்லாவற்றையும் அவனுடைய அக்கா விடம் கூறுவான். அவளும் பொறுமையா க கேட்பாள்.அக்கா அல்லவா, ஆம் எபோதும் அவனுக்கு அவள்தான் அக்கா, எபோதும் அக்கா அக்கா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பான், ஒரு குழந்தை எப்படி அம்மாவை கூப்பிடுமோ அதுபோலதான் அவனும். இதனை அந்த அக்காவும் அறிவாள்.
இவனுக்கு பெரிதாக ஆசை ஒன்றும் இல்லை, அவனுடைய அக்கா எபோதும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பான். அக்காவை அவளுடைய வீட்டிற்கு கூட்டி செல்லும் போது அந்த கருமேகம் மழையாய் பெய்ய தொடகியது. இவனிடம் ரெயின் கோட் இருந்தது. ஆனால் அவனின் அக்காவோ வேண்டாம் என்று கூறிவிட்டாள்.ஏன் என்று தெரியாது. முதல் நாள் மழையில் கொஞ்சம் நனைந்த படி வீடு சென்றனர். மறுநாள் அதேபோல் அனால் நல்ல மழை, தன்னுடைய ரெயின் கோட்டை தந்து போட்டுகொள் என்றான் அக்காவோ வேண்டாம் என்று கூற, ஏன் இது தம்பி நான் போட்டது தான, போட்டுக்கோ கா(அக்கா), என்றான். அவள் மீண்டும் வேண்டாம் நீ மழையில் நலைவாய், என்றாள், தம்பியோ எனக்கு ஹெல்மெட் இருக்கு நீ போட்டுக்கோ என்று கொஞ்சம் அழு மூஞ்சி உடன், நீ போட்டுக்கோ இல்லை என்றாள் நானும் போட்டுக்க மாண்டேன் என்று கூற, அக்காவோ சரி கொடு என்று வாங்கி போட்டு கொண்டாள்.

இவனுக்கு மகிழ்ச்சி என்பது இதில் தான் உள்ளது. தன்னுடைய அக்கா மழையில் நனையாமல் அவளை பார்த்துகொள்வது. என்னதான் அக்கா ரெயின் கோட்டை போட்டுகொன்டாலும், அவளுடைய முகம் மழையில் நனைவது அவனை கொஞ்சம் கவலை கொள்ளத்தான் செய்தது. அவன் நினைத்தான் அக்கா இதை போட்டுக்கொள்ளவே (ரெயின் கோட்டை) இவ்வளவு அடம் பிடித்தால்…என்று.
இவன் இப்படிதான், எப்பவும் தான் என்று பார்க்க மாண்டான்,. இவனுக்கு அக்கா இல்லை என்ற, குறையை தீர்க்க வந்தவள் தான் இந்த அக்கா, அவனுக்கு…
அவனுக்கு எப்போதும் அவள் ஒரு பாசமிகு அக்கா(மும்மா)…
இவன் ஒரு தொடர்கதை…
தொடரும்…



