அக்கா வீட்டில் இருந்து மாமா வீட்டிற்கு சென்றனர், ஒரு சமயம் இவன் தன் சுட்டி தனத்தை காண்பித்தான், அவனின் கவின் அண்ணாவை நன்றாக கடித்து விட்டான். அப்போது அழ தொடங்கிய கவின் தன்னுடைய வீட்டுக்கு சென்ற பிறகு தான் அழுகையை நிறுத்தினான். அக்கா மீது இவனுக்கு எவளோ பாசமோ அதேபோல் தான் கவின். கவினுக்கு அம்மாவும் பிடிக்கும், சொல்லபோனால் அம்மா செல்லம் என்றே சொல்லலாம்.
கவின்னும் இவனும் நல்ல சகோதரர்கள் தான், ஆம் இவன் பெரியம்மா வீட்டில் இருக்கும் போது இருவரும் சேர்ந்து நன்றாக விளையாடுவார்கள், (ரேடியோ) 📻 வில் போட்டு பாட்டு கேட்க உதவும் கேசட் 📼 லில் உள்ள சக்கரங்களை வைத்து மற்றும் தீ பெட்டிகளை வைத்தும் 🚜 டிராக்டர் செய்து விளையாடுவார்கள், நீச்சல் அடிக்க கிணற்றுக்கு செல்வார்கள் இன்னும் பல சேட்டைகளை அவர்களின் சிறு வயதில் செய்துள்ளனர்.
இவன் பெரியம்மா வீட்டுக்கு சென்றால் இவனுக்கு பிடித்த எள்ளுருண்டை இவனுக்கு கிடைக்கும், பெரியம்மாவின் கைப்பக்குவதில் நன்றாக சுட்டு எடுத்து வைத்து எள்ளுருண்டை யை இவன் அப்போ அப்போது யாருக்கும் தெரியாமல் சுட்டு (எடுத்து) ருசிப்பான். எள்ளுருண்டை மட்டும் இல்லை முறுக்கும் கிடைக்கும், இரண்டையும் ஒரு புடி பிடிப்பான் இவன்.

மாலை நேரத்தில் தாயக்கரம் அனைவரும் சேர்ந்து விளையாடுவார்கள், பெரியப்பா முதல் பெரியம்மா அக்கா அண்ணன் மற்றும் இவன், இதில் அதிகமா கூல் குடிப்பது இவனின் பெரியப்பா தான். சில முறை இரவு பத்து பதினோரு மணி வரை போகும். சில முறை கள்ளத்தனம் செய்து விளையாடி ஜெய்பார்கள் அதில் கூல் குடிப்பது என்னவோ அவனின் பெரியப்பா தான், கள்ளத்தனம் செய்து ஜெய்பதில் இவனின் அண்ணன் தான் கெட்டிக்காரன். இவன் பள்ளிக்கூடம் விடுமுறை தான் சொர்க்கம், எப்போதும் வீட்டில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் இவனுக்கு, ஊருக்கு சென்றால் ஒரே குஷி தான், அக்கா அண்ணன் இவர்களும் சேர்ந்து இவனுடன் விளையாடுவார்கள் என்று.

அது மட்டும் இல்லை வான்கோழி – ல் பிரியாணி தன் பெரியம்மா வீட்டில் தான் முதல் முறையாக சாப்பிட்டான், பிரியாணி என்று சொன்னதும் முதல் ஆளாக போய்விடுவான் இவன். இவன் ஒரு பிரியாணி பிரியன் என்றே சொல்லலாம், இவன் பெரியம்மா வீட்டிலும் சரி, மாமா வீட்டிலும் சரி கேடபொங்கல் முதல் அனைத்து விருந்திலும் சரி பிரியாணி செய்தல் இவனுக்கு பிரியாணி மட்டுமே பரிமாறுவர்கள். காரணம் இவன்தான் கடைக்குட்டி இவனுடைய மாமாவிற்கு பையன் பிறக்கும் வரை.
அதன் பிறகும் இவன் பிரியாணி என்றால், அது மட்டுமே சாப்பிடுவான்.
அதற்காக இவன் அம்மா வின் சமையலை சொல்லாமல் விட்டாள் அவ்வளவுதான், இவனின் அம்மாவின் சமையல் இவனுக்கு இஷ்டம், இவனுக்கு பிரியாணி பிடித்ததற்கு காரணமே இவனின் அம்மா தான்.
இவன் ஒரு அம்மா செல்லம். அம்மா வின் சொல்லுக்கு மறு பேச்சு இல்லை.
தொடரும்…


