விடுமுறை தினமும் அக்காவின் வீடும்…தாய் மாமாவின் வீடும் ஒரு தொடர் கதை…(பகுதி – 2)

ஆம் அவனின் பாசம் அவனின் அக்காவின் மீது சிறு வயதில் இருந்தே தோன்றியது தான். அவன் பள்ளி விடுமுறை நாட்களில் திரும்ப திரும்ப அடம் பிடிக்கும் ஒன்று தன் பெரியம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று. முழு ஆண்டு விடுமுறை வந்ததும் அவன் அவனுடைய வீட்டில் உள்ள (Telephone) அலைபேசியை கொண்டு அவனின் பெரியம்மா வீட்டுக்கு டயல் செய்து –

எனக்கு school லீவ் விட்டுடாங்க நான் நாளைக்கு ஊருக்கு வரேன் என்று குறிப்பிட்டு விட்டு, மறுநாளே அக்காவை பார்க்க ஊருக்கு செல்லும் பழக்கம் கொண்டவன். அங்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் தன் அக்காவுடன் இல்லை இல்லை…அவனின் பெரியம்மாவிற்கு மற்றொரு குழந்தை பையன் இருக்கிறான். இந்த வாண்டுக்கு அண்ணன், ஆனால் இவனை கண்டால் அந்த அண்ணன் சிறு வயதில் ஓடி ஓடி ஒளிவான், காரணம் – முன்பு கூறியதுதான் கடித்து வைத்து அழகு பார்ப்பதில் இவன்தான் ராஜா. அதனால் தான் இவனுக்கு பெயர் டாக்டர் என்று வைத்தனர். அவனுக்கு அண்ணாவும் பிடிக்கும்.இவனை கண்டால் இவனின் அண்ணன் கவின் ராஜ் ஓடி விடுவான். ஆனால் இவன் இவனின் அக்கா வை அதுபோல கடித்து வைத்ததாக தெரியவில்லை.

தன் பெரியம்மா வீட்டுக்கு சென்று விட்டு பின் தான் தாய் மாமா வீட்டுக்கு செல்வான். அதுவும் அவனின் அக்கா அவன்கூட வர வேண்டும். இல்லை என்றால் அக்கா வருபோது தான் செல்வான். அவனுக்கு அவன் மாமா என்றாலும் ரொம்ப பிடிக்கும். அவன் சிறு வயதில் இருந்தே அவன் அவனுடைய மாமாவிற்கு ஒரு செல்ல பிள்ளை தான்.

அங்கு சென்று அவன், அவனின் அக்கா, அண்ணன், மற்றொரு அண்ணன் ராஜா, ஆக மொத்தம் நான்கு பேர், மிகவும் ஆனந்தமாக விளையாடி கொண்டு இருப்பார்கள். அங்கு அவனின் அப்புசி இருப்பர், கருமையான உருவம், நல்ல  திடமான உடல் அமைப்புடன் தன் பேரன் பேதிக்கு ஆசையாக மதிய நேரத்தில் மாடு மேய்த்து கொண்டு தன்  பேரன் பேதிக்கு ice வாங்கி கொடுப்பார்.

 

இங்கு தான் இவன் சேட்டை இல்லை இல்லை இவர்களின் சேட்டை ஆரம்பம் ஆகும். ஆம் இவர்களின் மாமாவிற்கு தலையில் குடுமி போட்டு விளையாடுவதில் தொடங்கி, தென்ன மட்டையை வைத்து கிரிக்கெட் விளையாட்டு வரை நன்றாக பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பார்கள்.

 

 

ஒரு முறை இவன் இவனுடைய பெரியம்மா வீட்டில் இருக்கும் போது, இவனுக்கும் அக்காவிற்கு சிறு சண்டை, அவனுக்கு ஒரு ஒன்பது பத்து வயது இருக்கும், தவறு யார் மீது என்பதை விட இவனுக்கு அக்கா இவனை திட்டி விட்டாள் என்பதே பெரிய வருத்தம். அழ ஆரம்பித்தான், நான் என் வீட்டிற்கு போறேன் என்று கூறிவிட்டு அவனின் துணிகளை எடுத்து ஒரு கட்டை பையில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டான். அவனின் அக்காவோ வீட்டின் வாயிலில் நின்ற படி அவனைய பார்த்து கொண்டு இருந்தால், அவன் என்ன செய்கின்றான் என்று. பாவம்  அப்பொழுது அவன் சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் தன் அக்காவை பார்த்து படி திரும்பி ஓடி வந்து தன் அக்காவை கேடியாக கட்டி பிடித்து கொண்டான்.

தொடரும் …

- மனோஜ் குமார் ரா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top